கருணாநிதியை கடுமையாக விமர்சித்த நமது அம்மா நாளிதழ்!

Report Print Arbin Arbin in இந்தியா

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியை கடுமையாக விமர்சித்து, அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில், கவிதை வெளியாகியுள்ளது.

மந்திரமும் தந்திரமும் என்ற தலைப்பில், எம்ஜிஆர் - கருணாநிதி படங்களை வெளியிட்டு, இந்தக் கவிதை பிரசுரிக்கப்பட்டுள்ளது.

எல்லோரும் எல்லாமும் பெறவே, மூச்சு இருக்கும் வரை முழங்கிய மூன்றெழுத்து மந்திரம் எம்ஜிஆர் என்றும், எல்லாமும் தன் குடும்பம் பெறவே என்பதிலே தந்திரமாய் செயல்பட்டவர் கருணாநிதி என்றும் மறைமுகமாக அதில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

மந்திரமும், தந்திரமும் ஒரு நாளும் ஒன்றென ஆகாது என்றும், இருவரையும் ஒப்பிட முடியாது என்பதனை ரஜினிகாந்த் உணருதல் நன்று என்றும் மறைமுகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு கருணாநிதிக்கு திரையுலகினர் நடத்திய அஞ்சலிக் கூட்டத்தில், நடிகர் ரஜினி, தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த வசைக் கவிதை அமைந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்