கேரளா பேரிடர்: ஹெலிகாப்டா் மூலம் மீட்கப்பட்ட கா்ப்பிணிக்கு ஆண் குழந்தை

Report Print Arbin Arbin in இந்தியா

கேரளாவில் பெரும் வெள்ளத்தில் இருந்து ஹெலிகொப்டா் மூலம் மீட்கப்பட்ட கா்ப்பிணிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதி மக்களை உணா்ச்சிவசப்பட செய்துள்ளது.

கேரளாவில் கடந்த 8ம் திகதி முதல் கனமழை, பெருவெள்ளம், நிலச்சரிவு என மாநிலமே பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 164ஆக உயா்ந்துள்ளதாக அம்மாநில முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆலுவா பகுதியைச் சோ்ந்த 25 வயதான சஜிதா ஜபீல் என்ற நிறைமாத கா்ப்பிணிக்கு பிரசவ கால வலி ஏற்பட்டது.

ஆனால் வீட்டை சுற்றி வெள்ளம் சூழ்ந்திருந்ததால் மருத்துவமனைக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இதனைத் தொடா்ந்து கட்டுப்பாட்டு அறைக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து விமானப்படை அதிகாரிகள் ஹெலிகொப்டா் உதவியுடன் அலுவா பகுதியை அடைந்தனா்.

பின்னர் அவா் ஹெலிகொப்டா் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் இருந்த சஜ்ஜீவானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், குந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தை இந்திய விமானப்படை தனது டுவிட்டா் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்