2 ஆண்டுகளாக இளம் பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த நபர்: திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு ரூ.10 லட்சம் மோசடி செய்த நபரை பொலிசார் கைது செய்தனர்.

அந்தமானை சேர்ந்த 34 வயது பெண் சென்னையை அடுத்த நந்தம்பாக்கத்தில் வசித்து வந்தார்.

இவருக்கும் புனேவை சேர்ந்த சசிகாந்த் சிவாஜி (38) என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது.

இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்து காதலை வளர்த்த நிலையில் சசிகாந்த் அந்த பெண்ணிடம், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி தனது ஆசைக்கு இணங்க செய்தார். அதன்பின்னரும் பலமுறை இருவரும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.

பின்னர் சசிகாந்த், தனியாக தொழில் தொடங்க வேண்டும் என்று கூறி அந்த பெண்ணிடம் இருந்து ரூ.10 லட்சத்தை பெற்றுக்கொண்டு சென்றார். அதன்பிறகு அவர் அந்த பெண்ணுடன் தொடர்புகொள்ளவில்லை.

இதனால் அந்த பெண் புனேவுக்கு சென்று சசிகாந்த் சிவாஜி பற்றி விசாரித்தார்.

அதில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்தே சசிகாந்த் தன்னை ஏமாற்றியது தெரியவந்தது.

இதுதொடர்பாக அந்த பெண் நந்தம்பாக்கம் பொலிசில் புகார் செய்த நிலையில் சசிகாந்தை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சசிகாந்த் இதுபோல வேறு பெண்களை ஏமாற்றினாரா என விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்