ஆற்றில் 17 வயது சிறுமியுடன் சடலமாக கிடந்த இளைஞர்: வெளியான பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஆனூர் பாலாற்று பகுதியில் வாலிபரும், இளம் பெண்ணும் சடலமாக கிடந்த நிலையில் அவர்கள் அருகில் விஷ பாட்டில் இருந்துள்ளது.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில் இறந்தவர்கள் பிரதீப்ராஜ் (19) மற்றும் சவுமியா (17) என்பது தெரியவந்தது.

இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

பின்னர் விஷம் குடித்து உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers