மருத்துவர் இல்லாமல் கர்ப்பிணிக்கு பிறந்த அழகான குழந்தை: அடுத்து நிகழ்ந்த சோக சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கருப்பட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (30). இவரது மனைவி கனிமொழி (24).

கனிமொழி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று மாலை இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர் பணியில் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்துள்ளனர்.

இதில் கனிமொழிக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த குழந்தை இறந்து விட்டது.

இது கனிமொழி மற்றும் அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இன்று காலை குழந்தையின் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் பிரகாஷ் மற்றும் அவர்களது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொலிசாரிடம் மருத்துவர் பணியில் இல்லாததே குழந்தை இறக்க காரணம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை பொலிசார் சமாதானப்படுத்தினார்கள். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்