தப்பிக்க வழி தெரியவில்லை: கழுத்தளவு தண்ணீரில் தத்தளித்தபடி உதவி கோரும் நபர்

Report Print Arbin Arbin in இந்தியா

கேரளாவில் பருவ மழையின் கோரத்தாண்டவம் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலத்தின் 14 மாவட்டங்களும் தொடர்ந்து வெள்ளத்தில் மிதக்கின்றன.

இந்நிலையில் நேற்று மாலை முதல் மிகக் கடுமையான மழை பெய்து வருகிறது, கிளவுட் பர்ஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு அதிகன மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வானம் பொத்துக் கொண்டு ஊற்றுவதால் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இதையடுத்து காசர்கோடு மாவட்டத்தைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் உச்சகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்ததால் தப்பிக்க வழி தெரியவில்லை எனவும், உதவிக்கு அழைப்பு விடுத்தும் இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை என நபர் ஒருவர் கழுத்தளவு வெள்ளத்தில் நின்றபடி உதவி கேட்டு கோரிக்கை விடுக்கும் வீடியோ ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கேரள மாநிலத்தில் உள்ள 39 நீர்த்தேக்கங்களில் 35 அணைகளும் திறக்கப்பட்டு உள்ளதால் வரலாறு காணாத பேரழிவை மாநிலம் சந்தித்து வருகிறது.

முல்லைப்பெரியாறு, இடுக்கி, இடமலையார் அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் கரையோர மக்களை பேரழிவுக்கு தள்ளி இருக்கிறது.

இதனால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களை, பேரிடர் மீட்புக்குழு முப்படை வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்