காதலியின் கணவனின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்தது ஏன்? காதலன் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனது காதலியின் கணவரை எதற்காக கொலை செய்தேன் என்பது குறித்து காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோதண்டன் - விஜயலட்சுமி தம்பதியினருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒன்றை வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கல்லாவி அருகே உள்ள கல் குண்டு இடத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் கோதண்டன் தலை பகுதி சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் கோதண்டன் தலையில் மர்ம நபர்கள் யாரோ கல்லைப்போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், சந்தேகத்தின் பேரில் பழநேசன் (27) மற்றும் அவரது நண்பர் கஞ்சனூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய 2 பேரை பொலிசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் பழனிவேல் என்கிற பழநேசன் விஜயலட்சுமியிடன் ஏற்பட்ட கள்ளகாதலுக்கு கோதண்டன் இடையூறாக இருந்ததால் தனது நண்பர்கள் 3 பேர் உதவியுடன் கொலை செய்தது அவர்கள் தான் என்று தெரியவந்தது.

பழநேசன் அளித்துள்ள வாக்குமூலத்தில், கோதண்டனும், அவரது மனைவி விஜயலட்சுமியும் கருந்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். இதனை பயன்படுத்திக் கொண்ட நான் விஜயலட்சுமியுடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டேன்.

இதுகுறித்து தகவலறிந்த கோதண்டன் என்னிடம் வந்து தனது மனைவியை சந்திக்க கூடாது என்று கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கோதண்டனை கொலை செய்ய திட்டமிட்டேன்.

சம்பவத்தன்று நானும் எனது நண்பர்கள் சக்திவேல், ராஜா, மாது ஆகியோருடன் மது குடித்தோம். பின்னர் 4 பேரும் சேர்ந்து கோதண்டன் தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று அவரை கல்குண்டு அருகே உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு குண்டு கட்டாக தூக்கி கொண்டு வந்தோம். அங்கு வைத்து கோதண்டன் வாயில் மதுவை ஊற்றினோம்.

மதுகுடித்த அவர் அங்கேயே மயங்கி கிடந்தார். உடனே நான் அருகில் இருந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்தேன். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக கோதண்டன் உயிர் இழந்தார் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்