என்னை தூங்க வைத்து விட்டு துரோகம் செய்தார்: மனைவியை கொன்ற கணவன் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் மனைவியை அடித்து கொலை செய்த கணவர் பொலிசில் சரணடைந்துள்ளார்.

தல்லூரி ராம்பாபு என்பவருக்கும், நாகலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டாக மனைவியின் நடத்தையில் ராம்பாபுவுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

சண்டையானது காவல் நிலையம் வரை சென்று பின்னர் சமாதானம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன் தினம் நாகலட்சுமியை, ராம்பாபு மரக்கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அடுத்தநாள் பொலிசிடம் சரணடைந்துள்ளார்.

பொலிசாரிடம் ராம்பாபு அளித்துள்ள வாக்குமூலத்தில், நாகலட்சுமி தினமும் இரவு தூக்கமாத்திரையை கொடுத்து என்னை தூங்கவைத்து விடுவார்.

பின்னர் தனது கள்ளக்காதலுடன் தொடர்பு கொள்வார்.

இதே போல நேற்று முன் தினம் எனக்கு தூக்க மாத்திரையை கொடுத்த போது அதை சாப்பிடாமலேயே சாப்பிட்டது போல நடித்தேன்.

பின்னர் நான் தூங்கிவிட்டதாக நினைத்த நாகலட்சுமி வேறு நபருடன் பக்கத்து அறையில் இருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் நாகலட்சுமியை அடித்து கொன்றேன் என கூறியுள்ளார்.

ராம்பாபு கூறுவது உண்மைதானா என விசாரித்து வரும் பொலிசார், நாகலட்சுமியுடன் தொடர்பில் இருந்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...