பிரபல நடிகை திடீர் மரணம்: சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்

Report Print Raju Raju in இந்தியா

பிரபல நடிகை சுசிதா சக்ரபோர்தி உடல்நலக்குறைவால் காலமானார்.

பெங்காலி மொழியில் சில திரைப்படங்கள் மற்றும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் சுசிதா.

ஜெயா, அஞ்சல் போன்ற தொடர்களில் சுசிதாவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சுசிதா நேற்று முன்தினம் மாலை காலமானார்.

திறமையான நடிகையாக அறியப்படும் அவரின் மறைவு சக நடிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

சுசிதாவுடன் அஞ்சல் தொடரில் நடித்த சக நடிகர் சர்போரி கூறுகையில், புற்றுநோயை எதிர்த்து சுசிதா தைரியமாக போராடினார்.

நோயை கண்டு அவர் மனம் கலங்கியதே இல்லை. சுசிதாவின் மறைவு ஈடு செய்ய முடியாதது என கூறியுள்ளார்.

இது போல பல நடிகர், நடிகைகள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்