முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து கருணாநிதி கூறியது என்ன தெரியுமா?

Report Print Kabilan in இந்தியா

இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று காலமானது தேசிய அளவில் அரசியல் தலைவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் சிறுநீரக தொற்று, நுரையீரல் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், அவரது உடல் நிலை மோசமடைந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று மாலை சிகிச்சைப் பலனின்றி வாஜ்பாய் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது.

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு பொதுவாக வாஜ்பாயின் மீது அன்பும், மரியாதையும் உண்டு. பி.ஜே.பி-க்கும், தி.மு.க-விற்கும் கொள்கை வேறுபாடுகள் இருந்த போதிலும் வாஜ்பாய் தலைமை வகித்தபோது, கூட்டணிக்கு சம்மதித்து தி.மு.க அவரை வெற்றி பெற செய்தது.

அச்சமயத்தில், தான் வாஜ்பாயை எவ்வளவு மதிக்கிறேன் என்பதை உணர்த்தும் வகையில் கருணாநிதி கவிதை ஒன்றை எழுதினார்.

அந்த வரிகளில் ‘பி.ஜே.பி என்னும் கெட்ட மரத்தினில் ஒரு நல்ல கனி தான் அடல் பிஹாரி வாஜ்பாய்’ என கருணாநிதி குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers