பெருவெள்ளத்தின் நடுவில் வியக்க வைத்த கேரள சிறுமி: மீட்பு குழுவையே கண்கலங்க வைத்த சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

கேரளாவில் பெரு வெள்ளத்தில் சிக்குண்டவர்களை மீட்க சென்ற குழுவினரிடம் சிறுமி ஒருவர் சாப்பிட்டு பல நாட்களானது என புன்னகை மாறாத முகத்துடன் தெரிவித்துள்ளது மீட்பு குழுவையே கண்கலங்க வைத்துள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவு பெய்துவரும் கன மழையால் இதுவரை 80-கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

பாந்தோடும் வெள்ளத்தில் சிக்கி 300-கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். மீட்பு நடவடிக்கையை எதிர்பார்த்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கானோர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

நீடிக்கும் மழையால் அத்தியாவசிய பொருட்களை கூட பெற முடியாமல் அப்பாவி மக்கள் தவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு மீட்பு குழுவினர் முழு முயற்சியுடன் உதவிட முயன்று வருகின்றனர். இந்த நிலையில் மீட்பு குழுவை சேர்ந்த நபர் ஒரு விட்டினுள் சென்று அங்கு இருக்கும் சிறுமியிடம் வீட்டில் உணவு இருக்கிறதா? என கேட்கிறார்.

அந்த சிறுமி இல்லை என பதிலளித்திருக்கிறார். காலையில் சாப்பிட்டீர்களா? என்ற கேள்விக்கும் இல்லை என்றே பதிலுரைக்கிறார். இல்லை என்று சொல்லும் போது அவரது முகத்தில் இருக்கும் புன்னகை அங்கு வந்த மீட்பு குழுவையே கண்கலங்க வைத்திருக்கிறது.

இல்லை என கூறும் போது “பசி எனக்கு பழகிப்போனது தான் என்பது போல அந்த சிறுமி நடந்து கொண்டவிதம்” வெள்ளத்தை விட கொடுமையானது வறுமை என்று உணர வைப்பதாக அந்த மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலத்தின் இடுக்கி பகுதியை சேர்ந்த அந்த சிறுமியின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers