ஒரேநாளில் 25 பேர் பலி.. வெள்ளத்தில் மூழ்கிய விமான நிலையம்: வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உண்டான வெள்ளத்தில், கொச்சின் விமான நிலையம் மூழ்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது, இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 25 பேர் பலியாகினர். மாநிலத்தின் பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

வெள்ளம் காரணமாக பல பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்டது.

இதனால் கனமழை நீரும் சேர்ந்துகொள்ள, கேரளாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான கொச்சின் விமான நிலையத்தை நீர் சூழ்ந்தது.

இதன் காரணமாக, கொச்சின் விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் அனைத்தும், திருவனந்தபுரம் போன்ற வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. அத்துடன், சனிக்கிழமை வரை கொச்சின் விமான நிலையம் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொச்சின் விமான நிலையம் முழுவதும் வெள்ளம் போல் நீர் பெருக்கெடுத்தும் ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers