முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடம்

Report Print Fathima Fathima in இந்தியா

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த 11ம் திகதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது ஒரு சிறுநீரகம் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சுவாசித்து வருகிறார்.

இவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் வாஜ்பாயின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரதமர் மோடி, குடியரசுத் துணைத்தலைவர், பாஜக தலைவர் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers