டீக்கடை வைத்து குழந்தைகளை படிக்க வைத்தோம்! 9 பிள்ளைகள் இருந்தும் தாய்க்கு ஏற்பட்டுள்ள நிலை

Report Print Santhan in இந்தியா

டீக்கடை நடத்தி குழந்தைகளை படிக்க வைத்தும், பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால், தற்போது சுதந்திர போராட்ட தியாகி பென்ஷனில் வாழ்ந்து வருவதாக தாய் ஒருவர் கூறியிருப்பது, நெஞ்சை உருகவைத்துள்ளது.

நாகை மாவட்டம், தரங்கம்பாடியை அடுத்த நல்லாடை கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயலட்சும் அம்மாள்(82). இந்திய சுதந்திரத்துக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூரில் திரட்டிய படையில் சேர்ந்து போரிட்ட வீரர் இராமசாமியின் மனைவி ஆவார்.

கடந்த 15 ஆண்டுகளுக்குமுன் தியாகி இராமசாமி இறந்துவிட்டதால், தற்போது இவர் தியாகி பென்ஷனில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், எங்கள் குடும்பம் தமிழகத்தின் திருவண்ணாமலையை பூர்விகமாகக் கொண்டது.

ஆனால் எனக்கு இரண்டு வயது இருக்கும் போது, எங்களுடைய குடும்பம் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டது. என்னோட அப்பாவின் பெயர் ராமசாமி எனவும், அவருக்கு சிங்கப்பூரில் உள்ள துறைமுகத்தில் வேலை கிடைத்ததாகவும், நான் அங்கிருக்கும் தமிழ் பள்ளிக் கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்ததாகவும் கூறியுள்ளார்.

இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு பாடுபட்ட அய்யா நேதாஜி சிங்கப்பூருக்கு வந்து இந்திய ராணுவத்திற்குப் படை சேர்த்திருக்கிறார்.

அப்போது என்னுடைய அப்பாவும், கணவரும் சொல்லாமல் கூட போய்விட்டார்கள். அதன் பின் சில ஆண்டுகள் கழித்து அப்பாவும், என் கணவரும் திரும்பி வந்தார்கள்.

எனக்கு 12 வயது இருக்கும் போது, என் கணவர் சார்பில் என்னைப் பெண் கேட்டார்கள். திருமணம் நடந்தது. திருமணம் நடந்த மூன்றாம் நாளே நேதாஜி படையில் சேர்ந்து போராடியதற்காக என் கணவரையும், தந்தையையும் சிங்கப்பூர் பொலிஸ் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்

இதைத் தொடர்ந்து நானும், என் அம்மாவும் இரண்டு பேரையும் விடுதலை செய்வதற்காக, நீதிமன்றத்திற்கும், வீட்டிற்கு தொடர்ந்து அலைந்தோம்.

ஒரு வழியாக விடுதலை கிடைத்ததால், இனியும் இங்கிருக்க வேண்டாம் என்று தமிழ்நாட்டிற்கு வந்து, டீக்கடை வைத்து இரண்டு பேரும் உழைத்தோம்.

எங்களுக்கு 6 பெண் பிள்ளைங்க, 3 ஆண் பிள்ளைங்க என மொத்தம் 9 பேர். எங்களால் முடிந்த அளவிற்கு அவர்களை படிக்க வைத்தோம்.

எல்லோருக்கும் திருமணமும் செய்து வைத்தோம். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று கடை வாசலில் உள்ள கொடிமரத்தில் தேசியக் கொடியை ஏற்றி சல்யூட் அடித்து அனைவருக்கும் என் கணவர் இனிப்பு வழங்குவார். அன்றைய நாளில் மிகவும் மகிழ்ச்சியாக் இருப்பார்.

ஒரு கட்டத்தில் அவர் நான் இறந்தால் கூட, என்னுடைய பென்சன் பணத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

அவரது பென்ஷன் பணத்தில் அடக்கம் செய்தோம். அவருக்குப்பின் வீட்டுமனையை மூன்று பிள்ளைகளும் பிரித்துக் கொண்டு என்னை கைவிட்டுவிட்டார்கள்.

நான் இதை எல்லாம் நினைத்து கவலைப்படவில்லை. உள்ளூரில் இருக்கும் ஒரு மகள் வீட்டின் ஓரத்தில் ஒரு ரூமைக் கட்டி வசிக்கிறேன். யாரையும் எதிர்பார்க்காமல் தியாகி பென்ஷனால் என் காலம் ஓடுகிறது என்று உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்