ஸ்டாலினை தலைவராக விட மாட்டேன்! அதிரடியை தொடங்கினாரா அழகிரி?

Report Print Raju Raju in இந்தியா

திமுக தலைவராக ஸ்டாலினை வர விட மாட்டேன் என அழகிரி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு மு.க ஸ்டாலின் மற்றும் மு.க அழகிரி இடையிலான பனிப்போர் அதிகரித்துள்ளது.

கருணாநிதியின் மறைவையடுத்து திமுக-வின் அடுத்த தலைவராக ஸ்டாலின் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி இருந்த கடைசி நான்கு நாட்களும் தூக்கம் வராமல் தவித்தாராம் அழகிரி.

அப்போது, திமுக அதிருப்தி கோஷ்டியினர் சிலர் அவரைச் சந்தித்தனர். நீங்கள் தான் கட்சியைக் காப்பாற்றவேண்டும்.

கார்ப்பரேட் கம்பெனி ஸ்டைலில் கட்சியை மாற்ற நினைக்கும் கோஷ்டியிடமிருந்து மீட்க வேண்டும் என்று சொன்னார்களாம்.

அவர் விரக்தியுடன் அவர்களைப் பார்த்து, நானே கட்சியில் இல்லை. நான் என்ன செய்ய முடியும் என்று அலுத்துக் கொண்டுள்ளார்.

அதற்கு ஆறுதலாக பேசி சிலர் உங்களைக் கட்சியில் சேர்க்க வேண்டும் என ஸ்டாலினுக்கு எண்ணம் இருக்கிறது. ஆனால், அவர் வீட்டில் கிச்சன் கேபினட்தான் அதைத் தடுக்கிறது என்று சொல்ல, அழகிரி டென்ஷனாகிவிட்டார்.

அவர்கள் சொன்னால் ஸ்டாலின் விடுவதா? இப்போ நான் சொல்கிறேன். செயல்தலைவராக இருந்தபடியே எல்லா அதிகாரத்தையும் ஸ்டாலின் கையில் வைத்திருக்கிறார். பிறகு எதற்கு அவருக்குத் தலைவர் பதவி?

அந்தப் பதவி என்பது என் அப்பாவுக்குத்தான் நிரந்தரமானது. அவர் உட்கார்ந்த இருக்கையில் வேறு யாரையும், குறிப்பாக ஸ்டாலினை அமரவிட மாட்டேன் என கூறியதாக தெரிகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்