26 நொடிகளில் குழந்தையை காப்பாற்றிய கண்ணையா குமார்! யார் இவர்?

Report Print Fathima Fathima in இந்தியா

வரலாறு காணாத மழை பொழிவால் பேரழிவை சந்தித்துள்ளது கடவுளின் தேசமான கேரளா.

சமீபத்தில் வெள்ளத்தில் பாலம் முழுமையாக மூழ்கும் நிலையில் கையில் குழந்தையுடன் வெறும் 26 நொடிகளில் பாலத்தை கடந்த மீட்புபடை வீரரின் செயல் பலரது பாராட்டையும் பெற்றது.

அவர் பெயர் கண்ணையா குமார் என்பதும், சென்னையில் இருந்து கேரளா வந்துள்ள 10 படைப்பிரிவுகளில் ஒருவர் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து அவர் கூறுகையில், பீகாரை சேர்ந்தவன் நான், எனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பள்ளிப்படிப்பை முடித்ததும் அரசுப் பணித்தேர்வுகளை எழுதினேன்.

பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவில் கடந்த ஆறு ஆண்டுகளாக பணிபுரிகிறேன்.

எனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அரசு பணியில் சேர்ந்து, இன்று பலரது குடும்பத்தையும் காப்பாற்றுவதில் மகிழ்ச்சி.

எங்கள் பெற்றோரும் பெருமையாக இருக்கிறார்கள், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் என் குடும்ப உறுப்பினர்களே என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்