இந்தியாவின் 72-வது சுதந்திர தினம்: தேசிய கொடியை ஏற்றினார் தமிழக முதல்வர்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதற்காக சென்னை கோட்டை கொத்தளம் உட்பட தலைமை செயலகம் கட்டிடம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

சுவர்களுக்கு வர்ணம் பூசப்பட்டு அவை புத்தம் புதுப் பொலிவுடன் காட்சியளித்தது.

இதையடுத்து சற்றுமுன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து அவர் உரையாற்றி வருகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்