நள்ளிரவில் மனைவிக்கு நேர்ந்த கொடுமை: தன் உயிரை கொடுத்து மனைவியை காப்பாற்றிய கணவன்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் வீட்டுக்கு திருட வந்தவர்கள் மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட நிலையில் அதை தடுத்த கணவன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் ராஜீவ் குமார். இவர் மனைவி ரஜ்னி ரஞ்சன். தம்பதிக்கு அந்த்ரா என்ற மகள் உள்ளார்.

ராஜீவ் அரசு துறையில் பெரிய அதிகாரியாக உள்ள நிலையில் அரசு குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கழிவறைக்கு செல்ல ராஜீவ் எழுந்த நிலையில் வீட்டு முற்றத்தில் ஏதோ சத்தம் கேட்டது.

இதையடுத்து கதவை அவர் திறந்த போது அங்கு முகத்தை மூடியபடி மூன்று திருடர்கள் நின்றிருந்தனர்.

இந்த சமயத்தில் ரஞ்சனும் அங்கு வந்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் ராஜீவிடம் உள்ள பணம் நகைகளை கேட்டு மிரட்டினர்.

பயந்த போன ராஜீவ் தன்னிடம் இருந்த 40,000 பணத்தை கொடுத்தார்.

ஆனால் தங்களுக்கு இன்னும் பணம் வேண்டும் என திருடர்கள் கேட்ட நிலையில் ராஜீவ் தர மறுத்தார்.

இதையடுத்து மூவரும் ராஜீவ் மனைவி ரஞ்சனை பலாத்காரம் செய்ய முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜீவ், மனைவியை காப்பாற்ற போராடினார்.

இதில் ஆத்திரமடைந்த மூவரில் ஒருவர் ராஜீவை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார். பின்னர் மூவரும் தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து பொலிசில் ரஞ்சன் புகார் கொடுத்த நிலையில் பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்