பாரதியின் கவிதையை தமிழில் வாசித்த மோடி! சுதந்திர தின உரை

Report Print Deepthi Deepthi in இந்தியா

72-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு காலை 7.15 மணியளவில் வருகை புரிந்த பிரதமர் மோடி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் 7.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். தேசியக்கொடிக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். பின்னர் நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார்.

நரேந்திர மோடியின் உரை,

நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள், இந்தியா புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் வலிமையான பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு துறைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. அனைவருக்குமான இந்தியாவை உருவாக்க வேண்டியது நமது கடமை.

பாஜக ஆட்சியில் எய்ம்ஸ், ஐஐடிக்களை ஏற்படுத்தியுள்ளோம், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை இந்த அரசு உறுதி செய்துள்ளது.

அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டம் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் களங்கரை விளக்கமாக உள்ளது.

பேரிடர் காலத்தில் கருணையுடனும், போர்க்காலத்தில் ஆக்ரோஷத்துடனும் நமது ராணுவ வீரர்கள் உள்ளனர். எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு நாட்டு மக்கள் பக்கபலமாக இருக்கிறார்கள்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் நீலகிரி மலையில் பூத்துள்ளன. அந்த நீல நிற குறிஞ்சிப்பூக்கள் மூவர்ண கொடியில் உள்ள அசோக சக்கரத்தை நியாபகப்படுத்துகின்றன.

எல்லோரும் அமரநிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகுக்கு அளிக்கும் எனும் மகாகவி பாரதியின் கவிதையை தமிழில் வாசித்து மேற்கோள் காட்டினார் மோடி.

சுதந்திர தினத்தையொட்டி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், மத்திய மந்திரிகள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேவகவுடா, பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு நாட்டு தூதர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்