எனக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது: ஷாக் கொடுத்த ராகுல் காந்தி

Report Print Fathima Fathima in இந்தியா

காங்கிரஸ் கட்சியை மணம் முடித்துள்ளதால் தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாக தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி.

அப்போது செய்தியாளர்களிடம் பதிலளிக்கையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக 230 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது, எனவே மோடி மீண்டும் பிரதமராவார் என்ற பேச்சுக்கே இடமில்லை.

காங்கிரஸ் கட்சியின் அந்தந்த மாநிலப் பிரிவுகள் ஒத்த கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல் கூட்டணி அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் அவரது திருமணம் பற்றி கேள்விக்கு, எனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது, காங்கிரஸ் கட்சியையே நான் மணமுடித்துள்ளேன் எனவும் பதிலளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்