எலியின் உடலில் முளைத்த செடி: ஆச்சர்ய வீடியோ

Report Print Vijay Amburore in இந்தியா

மத்திய பிரதேசத்தில் எலி ஒன்றின் உடலில் செடி ஒன்று வளர்ந்திருப்பது அனைவர்க்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் ரத்லம் பகுதியை சேர்ந்த தாதர் சிங் என்ற விவசாயி, தனக்கு சொந்தமான இடத்தில் சோயா பீன்ஸை விதைத்துள்ளார், அவற்றை காணப்பதற்காக சமீபத்தில் தோட்ட பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்றவருக்கு பெரும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக, செடியுடன் எலி ஒன்று சுற்றி திரிவதை பார்த்துள்ளார். பின்னர் அதை பிடித்து பார்க்கும்போது, அதன் கழுத்து பகுதியில் செடி ஒன்று வளர்ந்திருப்பதை கண்டறிந்துள்ளார்.

இயற்கையின் அதிசயமாக மக்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை அளித்திருந்தாலும், செடியால் எலி படும் வேதனையை அறிந்துகொண்ட தாதர், அதன் கழுத்து பகுதியிலிருந்த செடியை வேகமாக பிடிங்கியுள்ளார்.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் உயிரியல் துறை தலைவராக இருப்பவர் கூறுகையில், எலியின் கழுத்து பகுதியில் காயம் இருந்தபோது விதைகள் விழுந்து வளர்ந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார். மேலும், இதனால் எலியின் மூளைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்