பணக்கார பெண்களின் பட்டியல் வெளியானது! இடம்பிடித்த தமிழ்பெண்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கோடக் வெல்த் - ஹுருன் என்ற நிறுவனம் இந்தியாவின் பணக்கார பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் முதல் இடத்தில் இருக்கும் ஸ்மிதா கிரிஸ்னாவுக்கு ரூ.37,500 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. கோத்ரேஜ் குழுமத்தில் ஸ்மிதா கிரிஸ்னாவுக்கு 20 சதகவிகிதம் பங்கு உள்ளது.

இவரைத் தொடர்ந்து ஹெச்.சி.எல் நிறுவனத்தின் ஐ.டி. நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரான தமிழ் பெண் ரோஷினி நாடார் இரண்டாமிடம் வகிக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த இவரின் சொத்து மதிப்பு ரூ.30,000 கோடி ஆகும். இவர் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவ நாடார் என்பவரின் ஒரே மகள் ஆவார்.

பிரபல ஊடக நிறுவனமான டைம்ஸ் க்ரூப்பின் தலைவரான இந்து ஜெயின் ரூ.26 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் மூன்றாவது இடத்திலும், பெங்களூரூவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டுவரும் பையோகான் நிறுவனத்தின் தலைவர் கிரன் மஜும்தார் ஷா ரூ.24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

ஹெச்.சி.எல் நிறுவனத் தலைவர் ஷிவ் நாடாரின் மனைவி கிரண் நாடார் ரூ.20 ஆயிரம் கோடி சொத்துகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்