முதல் முறையாக மாறியது ஸ்டாலின் புகைப்படம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழகம் முழுக்க எல்லா திமுக மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள், தலைவர்கள் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.

இந்த பேனரில் முதல்முறையாக, பெரியார், அண்ணா, கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.

எப்போதும் தனியாக இருக்கும் ஸ்டாலின் புகைப்படம், இந்த முறை கருணாநிதிக்கு அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது.

அதுவும், இதுவரை அடிக்கப்பட்ட பேனர்களில் கருணாநிதி உயிரோடு இருந்தபோது அவரது புகைப்படம் முதலாவதாக இருக்கும், தற்போது ஸ்டாலின் படத்திற்கு அடுத்தபடியாக கருணாநிதியின் படம் அடுத்த அண்ணா மற்றும் பெரியாரின் புகைப்படம் இருந்துள்ளது.

இதன் மூலம் ஸ்டாலினின் தலைமையில் அனைவரும் இயங்க தயாராக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers