கள்ளக்காதலனை ஏவி கணவனை கொன்ற மனைவி!

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் கள்ளக்காதலனை ஏவி கணவனை கொன்ற வழக்கில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்த மகேந்திரகுமார் என்பவரது மகன் ராஜ்குமார்(வயது 31), திருப்பத்தூர் நகராட்சி குத்தகை சைக்கிள் ஸ்டாண்டில் வேலை செய்து வந்தார்.

இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர், இந்நிலையில் கடந்த 11ம் திகதி திருப்பத்தூர் அடுத்த பெரிய குனிச்சி பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

சம்பவதினத்தன்று ராஜ்குமார், துளசிராமன் மற்றும் ரமேஷ் உட்பட சிலரிடம் பேசிக் கொண்டிருந்ததை பார்த்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ரமேஷ் என்பவர் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் ரமேசுக்கும், கொலையுண்ட ராஜ்குமாரின் மனைவி கவுசல்யாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து கவுசல்யாவை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையே தனிப்படை பொலிசார் மாயமாகி இருந்த ரமேஷ், துளசிராமனை கைது செய்தனர்.

இருவரின் தொடர்பும் ராஜ்குமாருக்கு தெரியவந்ததால் கண்டித்துள்ளார், இதனால் ரமேஷை சந்திக்க முடியாமல் கவுசல்யா தவித்துள்ளார்.

எனவே கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்து ரமேஷை தூண்டி விட்டதும், ராஜ்குமாருக்கு மது வாங்கி கொடுத்து கழுத்தை இறுக்கி கொன்றதும் தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்