வருத்தப்பட வேண்டாம்! ஸ்டாலினை அழ வைத்த ரஜினி

Report Print Fathima Fathima in இந்தியா

திரைத்துறையினர் நடத்திய நினைவேந்தல் கூட்டத்தில் ரஜினிகாந்தின் பேச்சை கேட்டு ஸ்டாலின் கண்கலங்கிய சம்பவம் நடந்துள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கருணாநிதி மறைவுக்கு தமிழ் திரையுலகம் சார்பில் இரங்கல் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு, கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது பேசிய ரஜினிகாந்த், கலைஞர் இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை, தமிழகத்துக்கு பெரிய அடையாளமாக இருந்தவர் கருணாநிதி.

45 வயதில் தலைமை ஏற்று எத்தனையோ சாதனைகள், சூழ்ச்சிகள் மற்றும் துரோகங்களுக்கு மத்தியில் 50 ஆண்டுகள் கழகத்தை கட்டிக் காப்பாற்றியவர்.

அரசியல் களத்தில் பழைய ஆட்களாகட்டும், புதியவர்களாகட்டும் அவர்களிடம் முதலில் என்னிடம் நட்பு கொள் அல்லது என்னை எதிர்கொள், அப்போதுதான் தமிழ் நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்று அரசியல் சதுரங்கத்தில் புகுந்து விளையாடினார்.

கடைசியாக இறுதிச் சடங்கில் ஸ்டாலின் குழந்தை மாதிரி கண்ணீர் விட்டதை என்னால் தாங்கமுடியவில்லை. உடன்பிறப்புகள் இருக்கிறார்கள்.

ஆண்டவன் இருக்கிறான். அப்பா வந்த பாதை உங்களை வழி நடத்தும். வருத்தப்பட வேண்டாம் என ரஜினி காந்த் கூறியதை கேட்ட ஸ்டாலினுக்கு துக்கம் அடைத்துக்கொண்டு கண்கலங்கியது.

இதைத்தொடர்ந்து ஸ்டாலினை கட்டித் தழுவி ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்