ஸ்டாலினை விட அதிக சொத்துக்களை குவித்திருக்கும் அழகிரி: சொத்து மதிப்பு எவ்வளவு?

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் அக்கட்சியில் மீண்டும் ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆகிய இருவருக்குமிடையே போர் ஆரம்பித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்ட அழகிரி வெற்றி பெற்றார். 2009 முதல் 2013 வரை இராசயன மற்றும் உரங்கள் துறை அமைச்சராக இருந்தார்.

இவர் பதவியில் இருந்த காலத்தில் மதுரை மாவட்டத்தில் பல வன்முறைகள் நிகழ்வதற்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன, மேலும் மதுரையில் இயங்கி வரும் தினகரன் செய்தி நிறுவன ஊழியர்கள், கருணாநிதிக்கு அடுத்தபடியாக திமுகவின் த்லைவர் ஸ்டாலின் என கருத்துக்கணிப்பு வெளியிட்ட காரணத்தால் அந்த அலுவலகம் மீது தீவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 ஊழியர்கள் இறந்துபோயினர்.

இவ்வாறு, கட்சிக்குள் தனது தம்பியோடு இவர் கடைபிடித்துவந்த விரோத மனப்பான்மை மற்றும் கட்சியை சீர்குலைக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த காரணத்தால் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சியில் இருந்து இவரை கருணாநிதி நீக்கினார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை ஸ்டாலினுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார் இந்நிலையில் தந்தை இறந்துவிட்ட நிலையில் மீண்டும் இவரை இணைத்துக்கொள்ளும் எண்ணம் ஸ்டாலினுக்கு இல்லை,

தனது தலைமையில் கட்சி ஒரு தேர்தலை சந்தித்து, பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் அழகிரியை கட்சியில் சேர்ப்பது குறித்து நடவடிக்கை எடுக்கலாம் என்ற திட்டத்தில் ஸ்டாலின் இருப்பதாக கூறப்படுகிறது.

மதுரையில் வசித்து வரும் அழகிரி, ஸ்டாலினை விட காய் நகர்த்துவதில் கெட்டிக்காரர். ஆனால், ஸ்டாலின் செயல் தலைவராக இருந்தபோதிலும் செயல்படாத தலைவராக இருந்து வருகிறார் என்ற விமர்சனம் உள்ளது.

அழகிரி மற்றும் ஸ்டாலினின் சொத்து மதிப்பு

2009 ஆம் ஆண்டு தேர்தலின் போது அழகிரி தாக்கல் செய்த தனது சொத்துக்களின் விவரம்

மு.க.அழகிரியின் சொத்து விவரம்

ரொக்கக் கையிருப்பு - ரூ. 1 லட்சம். மனைவியிடம் ரூ. 50 ஆயிரம். மகனிடம் ரூ. 25 ஆயிரம்.

வங்கி முதலீடுகள் - அழகிரிக்கு ரூ. 6.5 கோடி, மனைவிக்கு ரூ. 67.4 லட்சம், மகனிடம் ரூ. 2.3 கோடி.

நிதி நிறுவன முதலீடுகள் - அழகிரி ரூ. 96 லட்சம், மனைவியிடம் ரூ. 83.3 லட்சம், மகனிடம் ரூ. 1.06 கோடி

நகைகள் - ரூ. 1.10 லட்சம் மதிப்பிலான 85 கிராம், மனைவியிடம் 9.10 லட்சம் மதிப்பிலான 700 கிராம், மகனிடம் ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான 50 கிராம்.

வாகனங்கள் - ரூ. 1.4 லட்சம் மதிப்பிலான ஹோன்டா சிட்டி, 1.2 லட்சம் மதிப்பிலான லேன்ட்ரோவர், மனைவியிடம் ரூ. 5.33 லட்சம் மதிப்பிலான டயோட்டா இன்னோவா, மகனிடம் ரூ. 7 லட்சம் மதிப்பிலான ஸ்கோடா சூப்பர்.

அசையா சொத்துக்கள்

ரூ. 2.58 கோடி மதிப்பிலான விவசாய நிலம், மனைவிக்கு ரூ. 1.27 கோடி மதிப்பிலான விவசாய நிலம், மகனிடம் ரூ. 1.24 கோடி மதிப்பிலான விவசாய நிலம்.

வீடுகள்

மதுரை - ரூ. 60 லட்சம். அடுக்குமாடிக் குடியிருப்பு - ரூ. 34 லட்சம். ரூ. 2.09 கோடி மதிப்பிலான வர்த்தக கட்டடங்கள், பிளாட்டுகள். (மகனுக்கு) சென்னை பண்ணை இல்லம் மற்றும் பிற - மதிப்பு ரூ. 3.27 கோடி. மொத்த சொத்து மதிப்பு ரூ. 19.43 கோடி.

ஸ்டாலின் சொத்து மதிப்பு

2016 ஆம் ஆண்டு கொத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தாக்கல் செய்த தனது சொத்துக்களின் விவரம், 4 கோடியே 13 லட்சத்து 83 ஆயிரத்து 988 ரூபாய் சொத்துக்கள் உள்ள‌‌‌தாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதில் அசையும் சொத்துக்கள் மதிப்பு 80 லட்சத்து 33 ஆயிரத்து 242 ரூபாய் என்று அவர் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு இதே கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் போது தாக்கல் செய்த வேட்புமனுவில் 19 லட்சத்து 23 ஆயிரத்து 833 ரூபாய் அசையும் சொத்துக்கள் உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்

. தற்போது 3 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரத்து 746 ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் தம் வசம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்