ஆடி அமாவாசை முடிந்தது! அழகிரியின் செயல் பலனளிக்குமா? அவர் ஜாதகம் கூறுவது இதை தான்

Report Print Raju Raju in இந்தியா

கருணாநிதி மறைந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் மு.க அழகிரி - மு.க ஸ்டாலின் இடையில் உள்ள புகைச்சல் பற்றி எரிய தொடங்கியுள்ளது.

அழகிரி இன்று அளித்த பேட்டியில், ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் தன்னை கண்டு பயப்படுவதாகவும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

கருணாநிதி மரணத்திற்குப் பின்னர் திமுகவில் அழகிரியை வைத்து அரசியல் சதுரங்கம் ஆரம்பித்து விட்டது என்றே கூறலாம்.

சரி அழகிரியின் இந்த அரசியல் அதிரடி அவருக்கு லாபம் தருமா அல்லது சரிவை தருமா? அவருடைய ஜாதகம் என்ன சொல்கிறது என பார்ப்போம்.

மு.க. அழகிரி துலாம் ராசி, ஸ்வாதி நட்சத்திரக்காரர்.

அவரது ராசிக்கு ஜென்ம குரு, 3 ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன.

குருவின் பார்வை அவரது ராசிக்கு 6ஆம் வீடு, 8ஆம் வீடு, 11ஆம் வீடுகளின் மேல் விழுகிறது. லாப ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் இனி எல்லாம் லாபம் தான் என்கின்றனர் ஜோதிடர்கள்.

ஸ்டாலின் தலைமையை ஏற்று கொடுக்கும் பதவியை ஏற்றுக்கொண்டு அழகிரி திமுகவில் தொடர்வாரா? அல்லது கட்சியை உடைத்து புதுக்கட்சியை தொடங்குவாரா? என்பதை 2019ல் நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி சொல்லி விடும் என நம்பலாம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்