கருணாநிதியின் ஆன்மா தண்டிக்கும்.. ஸ்டாலினுக்கு இது பிடிக்கவில்லை! அழகிரியின் பரபரப்பு பேட்டி

Report Print Raju Raju in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுகவில் நடக்கப்போகும் மாற்றங்கள் குறித்தே அனைவரும் உற்றுநோக்கி வருகின்றனர்.

இன்று காலை மெரினாவில் குடும்பத்துடன் வந்து அஞ்சலி செலுத்திய அழகிரி, திமுகவின் உண்மையான விசுவாசிகள் தங்கள் பக்கம் உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ஸ்டாலின் பற்றியும், கட்சி பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் கூறுகையில், என் தந்தையை சந்திக்கவும், உணர்ச்சியை வெளிப்படுத்தவும் இங்கு வந்தேன்.

நான் தற்போது திமுக-வில் இல்லை, நான் திமுகவுக்கு திரும்பி வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை, நான் வலுவான தலைவராக உருவெடுப்பேன் என அஞ்சுகிறார்கள்.

கட்சியின் பதவிகள் விற்பனை செய்யப்படுகின்றன, நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை, ஆறு மாத காலத்தில் கட்சி நிர்வாகிகள் நான் சொல்வதை செய்வார்கள்.

தற்போதுள்ளவர்கள் திமுகவை அழித்து விடுவார்கள், கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் ரஜினியுடன் தொடர்பில் உள்ளனர்.

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் கட்சி அழிந்துவிடும், நான் என் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து பேசுவேன்.

கட்சி நன்றாக செயல்பட்டால் ஏன் ஆர்.கே நகரில் திமுக தோல்வியை தழுவியது? கருணாநிதியின் ஆன்மா அவர்களை தண்டிக்கும் என கூறியுள்ளார்.

கட்சியின் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அழகிரி கடந்த 2014-ல் திமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்