உன் கணவனுக்கு சூனியம் வைத்துள்ளேன்: பெண்ணை மிரட்டி துஷ்பிரயோகம் செய்த சொந்த மாமா

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணமான பெண்ணை அவரின் சொந்த மாமா மிரட்டி துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த 30 வயதான பெண்ணுக்கு, யோகேஷ் குபாவாத் (59) என்பவர் மாமா உறவு முறையாவார்.

மாந்ரீகம், பில்லி சூனியம் போன்ற விடயங்களை செய்து வந்த யோகேஷுக்கு அந்த பெண் மீது தவறான பார்வை இருந்துள்ளது.

இதையடுத்து பெண்ணிடம் சென்று உன் கணவருக்கு பில்லி சூனியம் வைத்துள்ளேன் என கூறி மிரட்டி இரு முறை பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தனது மாமா யோகேஷ் குறித்து பொலிசில் புகார் அளித்தார்.

இதற்குள் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி யோகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யோகேஷ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் அவரை கைது செய்வோம் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்