ஓடும் ரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ மேற்கொண்ட இளைஞர்கள்: வைரலான வீடியோவால் நூதன தண்டனை

Report Print Kabilan in இந்தியா
73Shares
73Shares
ibctamil.com

இந்தியாவில் ஓடும் ரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ செய்த மூன்று இளைஞர்களுக்கு, ரயில்வே நடைமேடையை சுத்தப்படுத்த வேண்டும் என நூதன தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டின் பாடகர் ஆப்ரே டிராக்கி கிராம், தனது ஸ்கார்பியன் என்ற இசை பாடல் தொகுப்பை வெளியிட்டார்.

அதில் ஒரு பாடலில் கிகி ஐ லவ் யூ என்ற வரிகளை காரில் ஒலிக்கவிட்டு, கீழே இறங்கி நடனம் ஆடிவிட்டு பின்னர் காரில் ஏற வேண்டும் என்பது தான் சவால்.

இந்த சவாலை அமெரிக்கா, மலேசியா, ஸ்பெயின் என பல நாடுகளில் பொதுமக்கள் ஏற்று மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சாலை விபத்துகளும் அதிகரிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

தற்போது இந்தியாவிலும் இது பரவி வருகிறது. அண்மையில் நடிகை ரெஜினா இந்த சவாலை செய்து வீடியோவாக வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் எச்சரித்தனர்.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த 3 இளைஞர்கள் ஓடும் ரயில் இதனை செய்ததுடன், அந்த வீடியோவை யூடியூப்பிலும் பதிவிட்டனர். இந்த வீடியோவை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே 14 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோவையும், நடைமேடையில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்தும் குறித்த இளைஞர்களை ரயில்வே பொலிசார் கண்டுபிடித்தனர்.

அதன் பின்னர், அவர்களுக்கு நூதன தண்டனையாக வசாய் என்ற ரயில் நிலையத்தின் நடைமேடையை 3 நாட்களுக்கு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் தண்டனை அளித்தனர். அத்துடன் ‘கிகி சேலஞ்சில்’ இருக்கும் அபாயம் குறித்து மக்களுக்கு பிரசாரம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர்கள் ஏற்கனவே ஆம்புலன்ஸில் கிகி சேலஞ்சை மேற்கொண்டு, அந்த வீடியோவை தங்களது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்