கடந்த ஒரு வாரத்தில் இணையத்தில் உலகம் முழுவதும் அதிகளவில் தேடப்பட்டுள்ள சொல் எது தெரியுமா?

Report Print Arbin Arbin in இந்தியா

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ‘கலைஞர்’ என்ற பெயர் கூகுளில் அதிகளவில் தேடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தன்னுடைய செய்திகள், பிரதானமாக பத்திரிகைகளில் வர வேண்டும் என்பதில் அதிகளவில் மெனக்கெடுவார். இதற்காக பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு மிக கவனத்துடன், அதேசமயம் மிக சாதுர்யமாக பதில் அளிப்பார்.

அவர் காலமான செய்தி நாடு முழுவதும் பெரும்பாலான பத்திரிகைகளில் பெரிய அளவில் இடம்பெற்றுள்ளது. கருணாநிதி மறைவு செய்தியை அனைத்து ஊடகங்களும் பெரிய அளவில் வெளியிட்டுள்ளன.

சமூக ஊடகங்களிலும் அவரைப்பற்றிய செய்திகள் பெரிய அளவில் வலம் வருகின்றன. மேலும், இணையதளத்திலும் அவரது பெயர் அதிகளவில் தேடப்பட்டது, தற்போது தெரியவந்துள்ளது.

கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது முதல் இணையதளத்தில் தேசிய அளவில் அதிகளவில் அவரது பெயர் தேடப்பட்டுள்ளது.

அதாவது 5 லட்சம் முறைக்கு மேல் ‘கருணாநிதி’ என்ற வார்த்தையையும், 2 லட்சம் முறைக்கு மேல் ‘கலைஞர்’ என்ற வார்த்தையையும் பதிவிட்டு, செய்திகளை மக்கள் பெற்றுள்ளனர்.

இதுதவிர மாநிலங்கள் வரிசையில், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா ஆகியவற்றில் கருணாநிதி குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் அதிக முறை தேடப்பட்டுள்ளன.

கூகுள் தேடல் பொறி மூலம், கடந்த 7 நாளில் 24 மாநிலங்கள் அதிகம் கருணாநிதி குறித்த தகவல்களை தேடியுள்ளனர்.

தேசிய அளவில் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலும் கருணாநிதி, கலைஞர் என்ற பெயர் அதிகளவில் தேடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்