எங்கே சென்றாய் கருணாநிதி: தவித்து நிற்கிறது கோபாலபுரம் வீடு

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்தியாவில் தெருவோர வீடமைந்த மிக அரிதான தலைவர்களில் ஒருவர் கருணாநிதி.

தெருமுக்கில் உள்ள வீடு பாதுகாப்பானது அல்ல என்று பலரும் சொல்லியும் தன்னுடைய கோபாலபுரம் வீட்டை மாற்ற மறுத்துவிட்டார் கருணாநிதி. அதேபோல இரவு - பகல் எந்நேரமும் வாயிற்கதவு திறந்திருக்கும் வீடும் அவருடையதுதான்.

கட்சிக்காரர்கள் ஒரு தலைவரின் வீட்டில் சகஜமாகப் புழக்கடை வரை புழங்கும் வீடும் கருணாநிதியினுடையதுதான்.

இன்று தாயை இழந்த குழந்தையாய் தனித்து விடப்பட்டுள்ளது. பந்தல், தோரணங்கள், அலங்காரங்கள், விளக்குகள் என அலங்கரித்து பார்த்த தன் தந்தையை காணாமல் கண்கள் அலைபாய்ந்து தேடி கொண்டிருக்கிறது. எங்கு சுற்றினாலும், எங்கு பயணித்தாலும் கடைசியில் தன் மடிமேல் வந்தே விழும் தன் சகோதரனை காணாமல் வெறித்து பார்த்துக் காத்திருக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்