கருணாநிதியை குழியில் இறக்கும் போது கதறி அழுத ஸ்டாலின்- அழகிரி: நெஞ்சை உருகவைக்கும் வீடியோ

Report Print Santhan in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை குழியில் இறக்கும் போது, ஸ்டாலின் உட்பட குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

மறைந்த கருணாநிதியின் உடல் இன்று சென்னை மெரினாவில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

அப்போது கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக குடும்பத்தினர் அழைக்கப்பட்டனர்.

கருணாநிதியைக் கண்ட ஸ்டாலின், அழகிரி போன்றோர் கண்கலங்கினர். கருணாநிதியின் மேல் போர்த்தப்பட்ட மூவர்ணக் கொடியை ஸ்டாலின் வாங்கிய போதும், அங்கிருந்த மக்கள் அனைவரும் எழுந்து வா..எழுந்து வா தலைவா என்று முழக்கமிட்டனர்.

இந்நிலையில் கருணாநிதியின் உடல் குழியின் உள்ளே இறக்கிய போது, குடும்பதினர் அருகில் நின்று கொண்டிருந்த ஸ்டாலின் திடீரென்று கதறி அழத் தொடங்கினார்.

இவரைத் தொடர்ந்து அழகிரி மற்றும் குடும்பத்தினர் என அனைவரும் அழத் தொடங்கினர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்