கருணாநிதியின் தலையை வருடி முத்தமிட்டு கண்ணீர் மல்க வழியனுப்பிய மகள் கனிமொழி: கண்கலங்க வைத்த புகைப்படம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கருணாநிதியுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதியின் உடல் கண்ணாடி பேழையில் இருந்து ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்ற வசனம் பொறிக்கப்பட்ட சந்தன பேழைக்கு மாற்றப்பட்டது.

அப்போது, கருணாநிதியின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கதறினர். உடன் 21 குண்டுகள் வானில் முழங்க கருணாநிதிக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட கருணாநிதியின் உடல் இரவு 7 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய கனிமொழி தந்தையின் தலையை வருடி விட்டு முகத்துக்கு முத்தம் கொடுத்து பிரியாவிடை அளித்தார். இதையடுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் குழிக்குள் இறக்கப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்