கருணாநிதியின் வாழ்க்கை சரித்திரத்தை மாற்றிய அந்த 33 நாட்கள்! இறுதியில் எட்ட முடியாமல் தோல்வி

Report Print Santhan in இந்தியா

தமிழக முன்னாள் முதல்வரான கலைஞர் கருணாநிதி, பெரியாரின் வாழ்நாள் கணக்கினை கடைபிடிக்க நினைத்து தோல்வியடைந்துள்ளார்.

திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நேற்று மரணமடைந்தார். பெரியாரின் கொள்கையை கடைபிடித்த இவரால் அவரின் வாழ்நாள் கணக்கினை கடைபிடிக்க முடியாமல் போய்விட்டது.

கருணாநிதியின் அரசியல் குருவான பெரியாவர் அவர்கள் இம்மண்ணுலகில் 34,432 நாட்கள் வாழ்ந்துள்ளார், அவரது சீடரான கலைஞர் அவரை விட வெறும் 33 நாட்கள் மட்டுமே குறைவாக மண்ணுலகில் பயணித்துள்ளார்.

அதாவது 1879-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் திகதி ஈரோட்டில் வெங்கட நாயகர் மற்றும் சின்னத்தாயி தம்பதியருக்கு மகனாய் பிரந்தவர் EV ராமசாமி அவர்கள். பிற்காலத்தில் அனைவராலும் பெரியார் என அழைக்கப்பட்டார்.

இவர் 1973-ஆம் ஆண்டு டிசம்பரில் 24-ல் இம்மண்ணுலகை விட்டு பிரிந்தார்.

கலைஞர் 1924-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-ஆம் திகதி நாகப்பட்டினத்தின் திருக்குவலை என்னும் கிராமத்தில் முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதியருக்கு மகனாய் பிறந்தார்.

பிற்காலத்தில் அனைவராலும் கலைஞர் என அன்போடு அழைக்கப்பட்ட இவர் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் நாள் உயிரிழந்தார்.

வாழ்நாள் கணக்கில் தந்தை பெரியார் அவர்கள் 34,432 நாட்கள் மண்ணுலகில் பயணித்தார். அதேப்போல் கருணாநிதி அவர்கள் 34,399 பயணித்துள்ளார். அதாவது தனது அரசியல் குருவான பெரியாரை விட 33 நாட்கள் மட்டுமே குறைவாக பயணித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்