அண்ணாவை பார்க்க போயிருக்கேன்னு சொல்லு! கண்கலங்க வைத்த கருணாநிதி புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மனைவி இருப்பது தொடர்பான புகைப்படம் வெளியாகி திமுக தொண்டர்களை கண்ணீர் வரவைத்துள்ளது.

தமிழக அரசியலின் முத்த தலைவரான கருணாநிதி உடல் இன்னும் சற்று நேரத்தில் மெரினாவில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இதனால் வழியெங்கும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அவரது பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் வடிக்கின்றனர்.

இந்நிலையில் கருணாநிதி மற்றும் அவரது மனைவி தயாளு அம்மாள் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதில் தயாளு அம்மாள் கதவை திறந்த நிலையில் உள்ளார். அப்போது அதன் வெளியில் கருணாநிதி இருக்கிறார்.

கருணாநிதியை தயாளு அம்மாள் ஒரு வித ஏக்கத்துடன் பார்ப்பது போன்று உள்ளது.

இந்த புகைப்படத்தைக் கண்ட இணையவாசி ஒருவர், கருணாநிதி யாராவது வந்து என்னைக் கேட்டால் அண்ணாவை பார்க்கப் போகிறேன் என்று சொல்லு என்பது போல் உள்ளது என்று கண்ணீருடன் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் மிகவும் உருக்கமான கமெண்ட்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்