கருணாநிதியின் இரண்டாவது மனைவி எங்கே? ஏன் எதிலும் கலந்துகொள்ளவில்லை

Report Print Deepthi Deepthi in இந்தியா

கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு அம்மாள் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மருத்துவமனைக்கு வரவில்லை.

மாறாக கருணாநிதியின் மூன்றாவது மனைவி ராஜாத்தி அம்மாள் தான் உடன் இருந்தார். 6 ஆம் திகதி கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, கடைசியாக தயாளு அம்மாள் வரவழைக்கப்பட்டார்.

மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட தயாளு அம்மாள், கருணாநிதியின் கைகளை பிடித்துக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பின்னர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தயாளு அம்மாள் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அவராலும் சரியாக நடக்க இயலாது. அல்ஜீமர் எனப்படும் ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், கருணாநிதி இறந்தபிறகு அவரது உடல் கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தபோது, தனது கணவரின் உடலையே பார்த்துக்கொண்டிருந்த புகைப்படம் வெளியானது. அதன்பின்னர், கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கிற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தபோது தயாளு அம்மாள் வரவில்லை.

மூன்றாவது மனைவி ராஜாத்தி அம்மாள் மட்டுமே இருந்தார். பிரதமர் மோடி வந்திருந்தபோது கூட, ராஜாத்தி அம்மாளுக்கு ஆறுதல் சொல்லி சென்றார். உடல்நலக்குறைவு காரணமாக தயாளு அம்மாள் இல்லத்திலேயே இருந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்