கருணாநிதி முகத்தை பார்க்கமுடியலையே! பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ

Report Print Santhan in இந்தியா

கலைஞர் கருணாநிதியின் முகத்தை பார்க்க முடியவில்லையே என்று பிரபல நடிகை கஸ்தூரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்ததையடுத்து சென்னையில் உள்ள மெரினாவில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையான கஸ்தூரி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் தற்போது வேறொரு இடத்தில் இருக்கிறேன். கருணாநிதியின் மரண செய்தியை கேட்ட போது, வேதனையடைந்தேன்.

இத்தனைக்கும் கூற வேண்டும் என்றால், கனிமொழி என்னுடைய எதிர்வீடு தான், கலைஞரை நிறைய முறை பார்த்திருக்கிறேன்.

ஆனால் கடைசி நேரத்தில் அவரது முகத்தை பார்க்கமுடியவில்லையே என்று வேதனையடைந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்