பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நேரம் முடிந்தது! அண்ணாவை காண புறப்படுகிறார் தம்பி கலைஞர்

Report Print Santhan in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான நேரம் முடிவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த கலைஞர் கருணாநிதியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த நேரம் முடிவடைந்ததையடுத்து, அவரின் உடலை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கான இறுதி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் அங்கிருக்கும் குடும்பத்தினர் கருணாநிதியின் உடலைப் பார்த்து கதறி அழுகின்றனர்.

மேலும் அண்ணாவை காண கலைஞர் புறப்படுகிறார் எனவும், தம்பியை வரவேற்க அண்ணா கத்துக் கொண்டிருப்பதாகவும் பலர் உருக்கமான கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்