கருணாநிதி விரலில் எப்போதுமே இருந்த அந்த மோதிரம் யாருடையது தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

இங்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர்.

இதையடுத்து தற்போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் கூட்ட நெரிசல் நிலவியதால், பொலிசார் அதை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு கருணாநிதியின் மனைவியான தயாளு அம்மாள் கடந்த 2000-ஆம் ஆண்டு பேட்டியளித்துள்ளார்.

அதில் அறிஞர் அண்ணா போட்ட மோதிரம் தான் தற்போது வரை அவரது விரலில் இருக்கு, இது தவிர வேறு யாரோ ஒரு சமயம் கொடுத்த பரிசான ஒரேயோரு பவள மோதிரம் மட்டும் போட்டியிருக்கிறார்.

அவருக்கு நிறைய பேர் மோதிரம் பரிசாக கொடுத்ததுண்டு, ஆனால் அவர் எதையும் நிரந்தரமாக போட்டதில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்