மெரினா கடற்கரை கருணாநிதிக்கு ஏன் அவ்வளவு முக்கியம்?

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னை என்றால் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு சின்னங்கள் அடையாளமாக இருந்தாலும் அண்ணா சமாதிதான் அதன் முக்கிய அடையாளமாகும்.

தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா கடந்த 1969-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி பேர் கலந்து கொண்டனர். இது கின்னஸ் சாதனையாக பின்னர் மாறியது.

அண்ணா மறைந்த பின்னர் அவரது உடல் மெரீனா கடற்கரையில் கூவம் நதிக்கரையோரம் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டது. பின்னர் அந்தப் பகுதி அண்ணா சதுக்கமாக அறிவிக்கப்பட்டது.

மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அவரை பற்றிய அருங்காட்சியகமும் உள்ளது. இந்த சமாதி தமிழக அரசின் செய்தித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதை பொதுப் பணித்துறை பராமரித்து வருகிறது. இந்த இடத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சமாதிகளும் உள்ளன.

மேற்கண்ட சிறப்புகளை பெற்ற அண்ணா சமாதிக்கு அருகில் தனக்கு 6 அடியில் இடம் வேண்டும் என்று கருணாநிதியே உயிருடன் இருந்த போது கேட்டு கொண்டார்.

அறிஞர் அண்ணா இறந்துபோது அவருக்காக கருணாநிதி எழுதிய கவிதை இதோ,

கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா
எழுந்து வா எம் அண்ணா
வரமாட்டாய்; வரமாட்டாய்,
இயற்கையின் சதி எமக்குத் தெரியும்
அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா...

அண்ணாவின் வழியில் தன்னை வளர்த்துக்கொண்ட கருணாநிதி அவர் வகுத்து கொடுத்த பாதையிலேயே தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

மெரினா கடற்கரையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகள் உள்ளன. அதாவது திராவிடத் தலைவர்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு முன்னா கருணாநிதிக்கு இடம் ஒதுக்கியதாக கூறப்படும் காந்தி மண்டபம் பகுதியில் தேசிய கட்சியான காங்கிரஸ் சார்பில் முதல்வர்களாக இருந்த காமராஜர், ராஜாஜி மற்றும் பக்தவத்சலம் ஆகியோரின் நினைவிடங்கள் உள்ளன.

மெரினாவில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது கருணாநிதியின் ஆசை மட்டுமல்லாது, மெரினா என்பது திராவிடக்கட்சியின் நினைவிடமாக மாறியுள்ளது என்பதற்காகவே, மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய திமுக சார்பில் இடம் கேட்கப்பட்டது,

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்