மோடி வரும்பொழுது காணாமல்போன அழகிரி? திமுக வட்டாரத்தில் நிலவும் குழப்பம்

Report Print Vijay Amburore in இந்தியா

உடல்நலக்குறைவினால் மரணமடைந்த கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்த வருகை தரும்பொழுது, அவரது மூத்த மகன் அழகிரி இல்லாமல் இருந்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலக்குறைவினால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொதுமக்களின் பார்வைக்காக ராஜாஜி மஹாலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் ராஜாத்தி அம்மாள், கனிமொழி மற்றும் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கருணாநிதியின் உறவினர்கள் அனைவரும் சூழ்ந்திருக்கும் வேளையில், அவரது மூத்த மகன் அழகிரி மட்டும் அந்த இடத்தில் இல்லாமல் இருந்தது தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த சில மாதங்களாகவே முதுகுவலியால் அவதிப்பட்டு வரும் அழகிரி நீண்ட நேரம் நிற்க முடியாததன் காரணத்தினாலேயே, மஹாலிற்கு பின்பக்கம் நாற்காலியில் அமர்ந்திருந்ததாக தற்போது திமுக சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்