நான் இல்லாது போனாலும் கூட! கருணாநிதியின் கடைசி உருக்கமான பேச்சு

Report Print Deepthi Deepthi in இந்தியா

கருணாநிதி கடைசியாக 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்று பேசினார்.

அந்த விழாவில் பேசிய கருணாநிதி, சட்டமன்ற தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவிக்கையில், “நாளைக்கு என்னவாகும் என்று கேட்கிறார்கள். நாளைக்கும் இன்றுபோலவே இருக்கும்.

நான் இல்லாது போனாலும் கூட இந்த இயக்கத்தை அசைக்க முடியாது. கட்சிக்கு என்ன செய்ய வேண்டுமோ?, என்ன பணியை செய்ய வேண்டுமோ? அதை செய்துவிட்டுத்தான் போவேன்.

யாரும் நம்மை வீழ்த்த முடியாது என்ற அளவுக்கு பணியாற்றுவோம். என்னால் எந்த அளவுக்கு முடியுமோ? அந்த அளவுக்கு உங்களுக்காக உழைப்பேன்.

நான் உங்களுக்கு வேலைக்காரன். உங்களின் அன்புக்கும், பாசத்திற்கும் கட்டுப்பட்டவன்” என்று தழுதழுத்த குரலில் உருக்கமாக பேசினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்