கருணாநிதியின் சந்தனப் பேழையில் என்ன வாக்கியம் எழுதியிருக்கு தெரியுமா? வெளியான புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதி சந்தனப் பேழையில் என்ன வாக்கியம் எழுதுள்ளது என்பது குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். அரசியலில் மூத்த தலைவரான கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல பிரபலங்கள் நேரடியாக வந்து தங்கள் இரங்கலை தெரிவித்து செல்கின்றனர்.

தன்னுடைய 12 வயதில் இருந்து ஓட ஆரம்பித்த இவர் நாடகம், திரை வசனம், அரசியல் என அனைத்திலும் அசைக்க முடியாத நபராக விளங்கினார்.

எப்போதும் எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணித்து, அதற்கேற்ற திட்டங்களை வகுக்கும் கருணாநிதி, தான் இறந்த பிறகு தன்னுடைய கல்லறையில் என்ன எழுத வேண்டும் என்பதையும் முன்பே கூறியுள்ளார்.

அதாவது தன்னுடைய கல்லறையில் ஓயாது உழைப்பவன் இங்கே உறங்குகிறான் என்று எழுதும் படி கூறியுள்ளார். இதையடுத்து கருணாநிதி சந்தன பேழை குறித்தது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதில், ஓய்வில்லாமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்ற வாக்கியம் எழுதப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்