கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த போது டி.ராஜேந்திரருக்கு ஏற்பட்ட நிலை! நியாயம் கேட்டு கதறிய பரிதாபம்

Report Print Santhan in இந்தியா

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சென்ன ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

அந்த வகையில் பிரபல இயக்குனரான டி.ராஜேந்தர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளார். அப்போது அவருக்கு காவல்துறையினர் அதிக தடை போட்டதாக கூறி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, நான் ஒரு பரம்பரை திமுககாரன் எனவும் கலைஞரை நான் என் தலைவராக ஏற்றுக் கொண்டவன், கலைஞரைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தவன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த போது, அவருக்காக இறுதி அஞ்சலி செலுத்த வந்த போது, பல தடைகள் இருந்தது. நான் அதை எல்லாம் தாங்கிக் கொண்டேன்.

ஆனால் இன்று என்னுடைய தலைவனை பார்க்க வந்த இடத்தில் பொலிசார் இவ்வளவு தடைகளா போடுவார்கள்.

நான் திமுகவின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர், கலைஞரால் என்னில் பாதி என்று அழைக்கப்பட்டவன்.

கலைஞரால் பூங்கா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆக்கப்பட்டவன். மாநில சிறுசேமிப்பு துறையின் துணை தலைவராக இருந்த எனக்கே இந்த கதியா என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் அவர் பொலிசாரிடம் நான் ஒன்று மட்டும் பதிவு செய்தேன். நான் வண்டியை வேண்டுமானால் எடுத்துக்கொண்டு திரும்பி சென்றுவிடுகிறேன்.

என் தலைவனுக்காக எத்தனை கிலோமீற்றார் வேண்டுமானால் நடப்பேன். அது பரவாயில்லை. ஆனால், என்னை இவ்வளவு நேரம் காக்க வைக்கிறீர்களே, இது எந்த வகையில் நியாயம், இரவு முழுவதும் என் கண்களில் கண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கிறது.

எப்படி எல்லாம் ஆளாக்கினார் என்று நினைத்து நினைத்து பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவர் எனக்கு தலைவர் அல்லா, அப்பா மாதிரி என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்