தமிழ்நாட்டின் மிகச்சிறந்த தலைவரை இழந்து விட்டோம்: நடிகை நமீதா உருக்கம்

Report Print Kavitha in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி சமூகவலைதளங்கள் ஊடாக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் நேரில், தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் கருணாநிதியின் கதை, வசனத்தில் கடந்த 2011ல் வெளிவந்த இளைஞன் என்ற திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நமீதா.

தற்போது நடிகை நமீதாவும் தன் இரங்களை சமூக வலைத்தளங்களுடாக தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் "தமிழ்நாட்டின் மிக சிறந்த தலைவரை நாம் இன்று இழந்து விட்டோம். தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் கருணாநிதி அளித்த பங்களிப்பு என்றுமே மறக்க இயலாத ஒன்றும்.

ஒரு நடிகையாக அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை ஆசிர்வாதமாகவே கருதுகிறேன். அது என்னால் மறக்கவே இயலாத ஒன்று.

அவர் தமிழ் மக்களின் இதயங்களில் எப்போதும் வாழ்ந்து கொண்டே இருப்பார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்