கருணாநிதி 108 வயது வரை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்ட நடிகர் விஜய்! மேடையில் உருக்கமாக பேசிய வீடியோ

Report Print Santhan in இந்தியா

மறைந்த திமுக கலைஞர் 108 வயது வரை வாழவேண்டும் என்று நடிகர் விஜய் ஆசைப்பட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நேற்று மாலை இவ்வுலகை விட்டு பிரிந்தத்தால், அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் குடும்பத்துடன் வந்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் கருணாநிதியைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் நடிகை விஜய் கருணாநிதியைப் பற்றி பேசியது தொடர்பான இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில், திமுக தலைவர் கருணாநிதி செய்ய வேண்டிய அனைத்தையும் சரியாக செய்து கொண்டிருக்கிறார். தனக்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது.

ஒரு குடும்பம் விபத்தில் சிக்கியிருந்தது. அப்போது அந்த குடும்பத்தில் இருந்த பெண் ஒருவர் கடவுளே எங்களை எப்படியாவது காப்பாற்றிவிடு, நான் 108 தேங்காய் உடைக்கிறேன் என்று கூறுகிறார்.

உடனே அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர் தேங்காய் எல்லாம் உடைக்க வேண்டாம், 108 என்ற நம்பருக்கு அழையுங்கள் என்று கூற, தற்போது அந்த குடும்பம் நல்ல நிலையில் இருக்கிறது.

இதற்கு காரணம் கலைஞர் தான் என்றும், அவர் 108 ஆண்டுகள் உயிர் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்