தோல்வியே சந்திக்காத தமிழின தலைவர் கருணாநிதி

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஐந்து முறை தமிழகத்தை ஆட்சி செய்த மு.கருணாநிதி, தன்னுடைய 95வது வயதில் சென்னையில் நேற்று உயிரிழந்தார்.

பத்திரிகையாளராக, தமிழ் இலக்கிய படைப்பாளியாக, திரைப்பட வசனகர்த்தாவாக, பல பரிமாணங்களை பெற்ற கருணாநிதி தமிழக அரசியலிலும், எம்.எல்.ஏ., எதிர்க்கட்சி தலைவர், முதல்வர் என அரை நுாற்றாண்டுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக, ஆளுமை மிக்க தலைவராக வலம் வந்தார்.

திமுக தேர்தலில் போட்டியிட முடிவுசெய்த முதல் தேர்தலிலேயே கலைஞர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது அவருடைய வயது 33. திரைப்படத்துக்கு வசனம் எழுதி கோபாலபுரம் வீட்டை வாங்கினார்.

என்.எஸ்.கிருஷ்ணன் தனது படத்துக்கு சம்பளமாக விலையுயர்ந்த காரை வாங்கிக் கொடுத்தார். திமுகவில் கார் வைத்திருந்த தலைவர் கலைஞர்தான் என்பார்கள்.

போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் வெற்றிபெற்ற சாதனையாளர் கருணாநிதி. 957ம் ஆண்டு தனது முதல் தேர்தலை குளித்தலைில் சந்தித்தார்.

அதன் பிறகு அவர் 1962ல் தஞ்சாவூர், 1967ல் சைதாப்பேட்டை, 1971ல் சைதாப்பேட்டை, 1977ல் அண்ணா நகர், 1980ல் அண்ணா நகர், 1989ல் துறைமுகம், 1991ல் துறைமுகம், 1996ல் சேப்பாக்கம் 2001ல் சேப்பாக்கம், 2006ல் சேப்பாக்கம், 2011ல் திருவாரூர், 2016ல் திருவாரூர் என போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிபெற்றார்.

1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் கலைஞர் போட்டியிடவில்லை. அப்போது அவர் எம்எல்சியாக இருந்தார்.

13 தேர்தல்களில் வெற்றிபெற்ற கருணாநிதி, தமிழகத்தில் மிக நீண்டாகாலம் அதாவது 19 ஆண்டுகள் முதல்வராக ஆட்சி செய்திருக்கிறார். இதுவும் அவருடைய சாதனை ஆகும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்