மயங்கிய செல்வி... கதறிய கனிமொழி... தழுதழுத்த ஸ்டாலின்: கண்ணீரில் மூழ்கிய கருணாநிதி குடும்பம்

Report Print Arbin Arbin in இந்தியா

காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் உடல் கோபாலபுரம் வீட்டுக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்பும், பின்பும் அவரது குடும்ப உறுப்பினர்களின் எதிவினைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது..

நேற்று மாலை 5.30 மணியளவில் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த கருணாநிதியின் மகள் செல்வி, அழுதுகொண்டே வீட்டுக்குள் நுழைந்தார்.

தொடர்ந்து வீட்டினுள் அழுதுகொண்டே இருந்தவர், இரவில் கருணாநிதியின் உடல் வீட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் மயங்கமடைந்தார்.

பின்னர் மயக்கம் தெளிந்து, வீட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தன் தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.

செல்வியுடன் ஒரே காரில் வந்த துர்கா ஸ்டாலின், மு.க.தமிழரசுவின் மனைவி உள்ளிட்டோர் கோபாலபுரம் வீட்டினுள் நுழைந்தனர்.

பின்னர், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வீட்டுக்குள் சென்றனர். அவர்கள், கருணாநிதியின் உடல் குடும்ப உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்கப்படுவதற்கான வேலைகளை மேற்கொண்டனர்.

காவேரி மருத்துவமனையில் இருந்து தனது கணவருடன் கோபாலபுரம் இல்லம் வந்தார், கனிமொழி.

மிகவும் சோர்வுடன் காணப்பட்டவர், குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார்.

கருணாநிதியின் மகன் மு.க.முத்து, இரவு 7.12 மணியளவில் கோபாலபுரம் வீட்டினுள் நுழைந்தார். உடல்நலம் சரியில்லாமல் தன் வீட்டிலேயே நீண்ட நாள்களாக இருந்துவரும் மு.க.முத்துவின் வருகை, பலருக்கும் ஆச்சர்யத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தின.

கோபாலபுரம் வீட்டினுள் இருந்த நடிகர் அருள்நிதி, கருணாநிதியின் உடல் கொண்டுவரப்பட்ட ஆம்புலன்ஸ் வருவதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்பு, வீட்டு வாசலில் வந்து அழுகையுடன் காட்சியளித்தார்.

ஆம்புலன்ஸ் கோபாலபுரம் பகுதியில் நுழைந்ததும் அருள்நிதி வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

கருணாநிதியின் உடல் வைக்கப்பட்ட ஆன்புலன்ஸ் வருவதற்கு முன்னரே, ஸ்டாலினின் மருமகன் சபரீசன் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்துவிட்டார்.

பின்னர், ஆம்புலன்ஸ் வருகையை எதிர்பார்த்து பதற்றத்துடன் வீட்டுக்கும் வாசலுக்கும் மாறி மாறி நடந்துகொண்டே இருந்தார்.

வீட்டினுள் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டதும், அவரின் முகத்தை தயாளு அம்மாளுக்குக் காண்பித்தனர்.

அப்போது அவரும், குடும்ப உறுப்பினர்களும் கருணாநிதியின் உடலைப் பார்த்து கதறி அழுத நிகழ்வு, காண்போரைக் கலங்கச்செய்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்