பெற்ற மகளையே குழி தோண்டி புதைத்த பெற்றோர்! விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் மகளை பெற்றோரோ கொன்று புதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் அனந்தபால். இவருக்கு 6 வயதில் தாரா என்ற குழந்தை இருந்தது.

சிறுமி தாராவும் ஊட்டச்சத்து குறைபாடும், ரிக்கெட்ஸ் நோய் பாதிப்பும் இருந்தது.

இப்படி ஊட்டச்சத்து குறைபாடுடைய சிறுமியை பெற்றோரே கொன்று புதைத்துவிட்டதாக கூறி, பக்கத்து வீட்டுக்காரர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அதன் பின் பொலிசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், மந்திரவாதி ஒருவர் அனந்தபாலிடம் சிறுமி தாராவை வீட்டிலேயே கொன்று புதைத்தால் உங்களுக்கு பிறக்கும் அடுத்த குழந்தை ஆரோக்கியமானதாக இருக்கும் என கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி அனந்தபாலுக்கு ஏற்னகவே ஒரு மகன் உண்டு. அவருக்கும் ரிக்கெட்ஸ் நோய் பாதிப்பு உள்ளதால், அடுத்து பிறக்கும் குழந்தையாவது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டும் என்று தாராவை கொன்று புதைத்துள்ளனர்.

மேலும் தாராவின் பாட்டி கூறுகையில், தாரா மீது அவள் அம்மாவுக்கு தொடக்கத்தில் இருந்தே பெரிய அளவில் அன்பு இல்லை. நிறைய மாத்திரைகள் கொடுத்து மருத்துவம் பார்த்தனர்.

இருப்பினும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாததால், தாராவின் அம்மா மந்திரவாதியின் சொல்படி, வீட்டிலேயே கொன்று புதைத்து கோயில் கட்ட முடிவு செய்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து தாராவின் உடலை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பிரேத பரிசோதனையில், தாரா கழுத்து நெரித்து கொல்லப்பட்டதும், தாராவின் வயிற்றில் உணவு ஏதும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

பொலிசார் தாராவின் பெற்றோர் விரைவில் கைது செய்வார்கள் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers